பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள்ளது. பாகிஸ்தான் அரசின் முக்கிய அதிகாரபூர்வ செயல்பாடுகளை வெளியிடும் டிவிட்டர் தளம் GovtOfPakistan எனும் பக்கம் இருக்கிறது. இந்த பக்கம் மூலம் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை பாகிஸ்தான் அரசு வெளியிடும். ஆனால், இந்த அதிகாரபூர்வ பக்கம் தற்போது இந்தியாவில் உள்ள டிவிட்டர் பயனாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. GovtOfPakistan எனும் பக்த்தின் கீழ், சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.