அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கியிருந்தால் மேற்கொள்ளப்படும் சட்ட விதியில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை. அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கியிருந்தால்,விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் வேறு கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில்,அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டு விபத்து ஏற்படுத்திய பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அதே கிளையில் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. […]