Tag: #Govtbus

பேருந்துகளில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது.! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு.!

மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில், பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் ஏறும்போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டுமென்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மா.போ.கழகப் பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது. அவர்கள் […]

#Conductors 4 Min Read
conductor

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பதாக சனி, ஞாயிறு அரசு விடுமுறை வருகிறது. எனவே நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு […]

#Govtbus 3 Min Read
Chennai CMBT Bus stand

இன்று முதல் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகளின் வசதிக்கேற்ப புதிய வசதி அறிமுகம்..!

சென்னையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று தொடக்கம். சென்னையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பேருந்து நிறுத்த பெயர்களை ஒலிபரப்ப சென்னை மாநகர பேருந்துகளில் உட்புறத்தில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்படுகின்றன. பேருந்துகளில் நிறுத்தும் […]

- 2 Min Read
Default Image

ஆம்னி பேருந்தின் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் – ஓபிஎஸ்

பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்கள், சனி, ஞாயிறு போன்ற […]

#AIADMK 7 Min Read
Default Image

#Breaking:இன்று கூடுதலாக 1,450 அரசுப் பேருந்துகள் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து,பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும்,எனினும்,8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 1450 அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக […]

#Govtbus 3 Min Read
Default Image

வாரிசுகளுக்கு பணி.. போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு – அமைச்சர் சிவசங்கர்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. சென்னையில் 14-ஆவது ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக்கு தொழிலாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார். 8 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என தொழிற்சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத […]

#Govtbus 3 Min Read
Default Image