சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், ஸ்டான்லி அரசு ஹாஸ்பிடலில் டாக்டர் ஹரிஹரன், அங்கு சிகிச்சைக்கு வந்த நபர், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மருத்துவரைத் தாக்கிய பரத் […]
பிரியா உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் […]
அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், […]
பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர் மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கையும், இந்த உயிழப்பில் உண்மை நிலவரம் கண்டறிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை. – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை. அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை. மாறாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டதாக பதியப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது . மேலும், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ஏழைகளுக்கு காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுவதில், விநியோகிஸ்தர்களுக்கும், மருந்து நிறுவன கம்பெனிகளுக்கும் ஏழைகளுக்கு வழங்காமலேயே வழங்கப்பட்டதாக பதிவு […]
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், 320 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை காணவில்லை. உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக, பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் செலுத்தப்பட்டு […]
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை உள்ளது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியை முடித்த பின்பு தான் இவர்களுக்கு சான்றிதழ் திரும்ப வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் 276 மருத்துவ மாணவ, மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த […]
குஜராத்தில் குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து நோயாளிகளும் ஐ.சி.யுவிலிருந்து வெளியேறினர். இதற்கிடையில், ஜாம்நகர் நகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தீ விபத்தில் யாரும் சிக்கிக்கொண்டார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் சில நாட்களுக்கு […]
பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அழிக்ககூடிய எரியூட்டி இயந்திரம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்பாடுதா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் வெளியே வரும் போது, முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை அழிக்கும் 5 எரியூட்டி இயந்திரங்களை, அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ள நிலையில், இந்த இயந்திரங்கள் ஓமந்தூரார் […]
தமிழகத்தில் முதன்முறையாக, தூத்துக்குடியில் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடியில், ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் […]
டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. இந்தியாவில் தற்போதுவரை 21700 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 686 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4325 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், […]
நமது உடலில் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ மருத்துவரைதான் அனைவரும் நம்புகிறோம். ஆனால், அப்படிப்பட்ட உயர்ந்த சேவையை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் சில நேரத்தில் செய்யும் சிறு அலட்சிய தவறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோவை, எம்.எஸ்.ஆர் புரம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது, தவறுதலாக அந்த ஊசியின் சிறுபகுதி அந்த குழந்தையின் உடலில் இருந்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி […]
ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : dinasuvadu.com
மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதேபோல், மதுரை புது தாமரைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் ராஜாஜி அரசு மருத்துவ மனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின், மருத்துவமனை ஊழியர்கள் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் கற்பகச் செல்வி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை […]
கேரளா: 25 வயதான வினுவின் மரணம் அனைவரயும் அதிர வைத்துள்ளது. இவர் பயணம் செய்வதில் மிகுந்த பிரியம் கொண்ட, வினு லிம்கா சாதனையாளர். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3,888 கிலோ மீட்டர் தூரத்தை காரில், 57 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தவர். 13 மாநிலங்களைக் கடந்து இரண்டரை நாள்களில் லிம்கா சாதனைக்குச் சொந்தக்காரராகியிருந்த வினு, இளம் வயதிலேயே மரணம் அடைவார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். டிசம்பர் 5-ம் தேதியன்று செங்கானுரில் டூவீலரில் வந்துகொண்டிருந்த, வினு […]
மதுரை அரசு மருத்துவமனையில், ரூ.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரசவ வார்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 6 மாடி புதியகட்டிடத்தில் கட்டிடத்தில், 850 படுக்கைகள் உள்ளன. மேலும் பழைய பிரசவ வார்டில் இல்லாத பல வசதிகள் இங்குள்ளது. ஆனால், உறவினர்கள் இருக்கவும், தங்கவும் வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இயற்கை மகப்பேறு, அறுவை சிகிச்சை மகப்பேறு, கர்ப்பப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதால், மதுரை மற்றும் தென்மாவட்டங்களிலிருந்தும் நிறைய கர்ப்பிணிகள் […]