வேலூரில் அரசு பள்ளி மாணவன் மைதானத்தில் ஓடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எனும் ஊரில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டு, அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களை பள்ளி மைதானத்தை சுற்றி ஓட சொன்னதாக தெரிகிறது. அந்த சமயம் மாணவன் மோகன்ராஜ், மைதானத்தில் சுருண்டு மயங்கி கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.