சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மார்ச் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு ஒரு அதிரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட […]
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஒய்வு பெரும் வயது 58-ஆக இருந்து வந்தது.இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.