தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல். நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. வேலை நிறுத்தம் எதனால்?: விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.மேலும், வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட […]