தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல். நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. வேலை நிறுத்தம் எதனால்?: விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.மேலும், வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட […]
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம். பேருந்தில் பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களை நடத்துநரே கீழே இறக்கிவிடலாம் அல்லது காவல்துறையில் ஒப்படைக்கலாம் என மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தும் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேருந்துகளில் பெண் பயணிகளிடம் ஆபாச செயலை செய்தாலோ, விசில் அடிப்பது, கண் சிமிட்டுவது உள்ளிட்ட தவறான செய்கைகளை குற்றமாக கருதப்படும் என்று […]
மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தவயல் அருகே அரசு பேருந்து ஒன்று கட்டுபாடின்றி வந்து ஒரு கார் மீது மோதியது. இந்த கார் பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது அரசு பேருந்து வந்து மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் 5 பேர் படுகாயமுற்று அருகில் உள்ள மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். source : dinasuvadu.com
தமிழ்நாட்டில் பேருந்துகளின் சாதாரண நாட்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவரும் அரசு பேருந்துகளில் பயணிப்பதால் கூட்டம் அலைமோதும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவார்கள். இதனால் நிறைய விபத்துகளும் நடந்துள்ளன. நிறைய மாணவர்கள் இறந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைத்து தர பொதுமக்களும், பிற பொது அமைப்புகளும் அவ்வபோது அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைக்கும் பொருட்டு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் நீதி மன்றத்தில் […]