டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். […]
அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்தக்கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்றுள்ளார். நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று மாநில ஆளுநர்கள் […]