கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் (ராஜ்பவன்) முதல் கேட் முன்பு உள்ள பாரிகாட் (இரும்பு தடுப்பு) மீது கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசினார். வீசிய உடன் அருகில் இருந்த சென்னை மாநகர காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பெட்ரோல் குண்டு வீசுவதற்கு சில […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது காவல் துறையினர், வெடிபொருள் தடுப்பு சட்டம், […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் அமிர்த கலச யாத்திரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தொடங்கி வைத்தார். இதன்பின் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, சுதந்திர போராட்டத்திற்காக போராடிய மருது சகோதர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம். சுதந்திர போராட்டம் 1801ல் தொடங்கியது. […]
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றதில் இருந்து, அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு இயற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்து இடாமல் நிலுவையில் வைப்பது, அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது கண்டத்துக்குரியதாக மாறியது. ஆளுநரின் செயலும் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை இல்லை என பல்வேறு கருத்துக்களை […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக பாதுகாப்பு இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட வினோத்திடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் என்பவர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கருக்கா வினோத் கடந்த வருடம், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர் என்பது குறிப்பிடக்கது. அப்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் ஒழிப்பு! எங்களுடன் துணை […]