தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய இருவரும் நீண்ட மாதங்களாக ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதில்லை எனவும் ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தெலுங்கானா முதல்வர் கலந்துகொள்ளவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் டெல்லியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.