அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட […]
பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி , அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமசித்து கூட்டாக […]
உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு […]
சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார். நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,குடியரசு […]
சென்னை:மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும் என்ற தகவல் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது.தற்போது,ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கி ஆளுநர் கூறுகையில்: “சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில்,சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்ற […]
சென்னை:தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி இரண்டாம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த நிலையில்,சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது.தற்போது,ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி,வணக்கம் என தமிழில் கூறி […]
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை:இன்று டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. அதன்படி,இந்த விழாவில் 12,814 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.முதல்வராக பதவியேற்றபின் ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம் என்று அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் உரை. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழா மதுரை காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு முனைவர் பட்டம் மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். இதன்பின் பேசிய ஆளுநர், நாட்டின் […]
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிஹாப்டர் புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற […]
சென்னை:காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியன்று,’ஆபரேஷன் ட்ரைடென்ட்’ போது, இந்திய கடற்படையானது PNS கைபர் உட்பட நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்தது, நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படை வீரர்களைக் கொன்றது.இந்நாளில்,1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்களும் நினைவுகூரப்படுகின்றனர். அந்த வகையில்,1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த கடற்படை வீரர்களின் நினைவாக நாட்டிற்கு இந்திய கடற்படையின் சாதனைகள் மற்றும் […]
சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு நேற்று முன்தினம் காவல் துறை சார் ஆய்வாளர்,நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது மிகுந்த அதிர்ச்சி என அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,சென்னை,கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
சென்னை:மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகள்,கடைகள், சாலைகள் என மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் […]
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் லட்சுமண் சிங் தலைமையில் குழு அமைத்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.