தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அரசுக்கு எதிராக செயல்படுவதும் இருந்து வருகிறது. சமீபத்தில், பலக்லைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு மோதல் ஏற்பட்டது. சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி வைத்தது. அப்போது, துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் […]
தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி […]
2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது . அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு […]
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலை ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்துக்கும் காசிக்குமான கலாச்சார தொடர்பு , பண்டைய வரலாறு, கல்வி, பொருளாதரம் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் இன்று (நவம்பர் 17) முதல் டிசம்பர் 16வரையில் வாரணாசியில், காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க சென்னையில் இருந்து தமிழக பிரதிநிதிகள் அடங்கிய ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து […]
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட போவதாக தற்போது அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு […]
மக்களவையில் திமுக எம்.பி மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1 மசோதாவுக்குக் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் மசோதா, 7 பேர் விடுதலை, சித்த பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட ஏழு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளன. ஆளுநர் சட்டப்படி செயல்பட வேண்டும். மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பும் […]
அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும் என ஆளுநர் ரவி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த […]