புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. […]