ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். நேற்று சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராஜ்பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர்,அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார். இதன் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, பிரதமரால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு […]