சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத வழிபாடுகளை தொடங்கினர். இன்று விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜை அல்லது மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வர் செல்வர். ஆளுநர் மாளிகையில், நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருப்பது போல அச்சடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. […]
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டிலை பற்றவைத்து வீசினார். இதை பார்த்த சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு […]
கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிற்பகலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் எனும் ரவுடி பெட்ரோல் பாட்டில் உடன் வந்து அதனை பற்றவைத்து கேட் அருகே உள்ள தடுப்பு (பேரிகாட்) மீது வீசினார். அவர் அடுத்த பாட்டில் பற்ற வைப்பதற்குள் சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை தடுத்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் […]
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. இதுகுறித்து,நேற்று காலை ஊடகங்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின்,”மே 7 […]
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 23-வது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு பல அரசியல் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இன்று […]