கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்ற கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவில்களை திறக்கக்கோரி பாஜக போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் கோவில்களை திறக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த திங்களன்று கடிதம் […]
மகாராஷ்டிரா ஆளுநர், தனது சொந்த மகள் போல தனது குறைகளை கேட்டறிந்தது எனது அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையான நிலையில், சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவசேனா கட்சி ஆளும் மஹாராஷ்ரா மாநிலம், கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அந்தவகையில், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி பாந்திராவில் […]
தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.ஆனால் நீதிமன்றத்தில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில் தனது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.செய்தியாளர்கள் சந்திப்பில் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,போதிய […]