அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டில் 25% அதிக மாணவர் சேர்க்கை நடத்த அமைச்சர் பொன்முடி உத்தரவு. அரசு கல்லூரிகளில் இருக்கின்ற இடத்திலேயே 25% இடத்தை அதிகரித்து கொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் தேவை ஏற்பட்டுள்ளது என்று கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.