சென்னையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் நாளை NMMS தேர்வு நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கல்வித்துறை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத் தேர்வு (NMMS) நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தகுதித் தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு […]
சென்னையில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால்,பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைக்க ஏதுவாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும் சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமலும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு கருணைத்தொகை,முன்பணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் இன்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாப்படி, அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு, அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், […]
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவன், வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, பள்ளி ஆசிரியை மாணவனையே, சுத்தம் செய்ய வைத்தார். தற்போது 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளியில் வேலை செய்ய விடுவதும், அல்லது துன்புறுத்துவதும் ஆங்காகே […]
காலம்காலமாக பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைகள் அதிகாமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவைகள் பொதுவாக உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதுபோன்ற கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கிறது. அதனால் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி கேன்டின் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகள் குறித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதிலும் பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. […]
கரூர் மாவட்டத்தில் உள்ளபெரிய வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக கண்ணன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். கண்ணன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்தவர். ஆனால் இவர் பட்டியல் இனத்தவர் என பொய் சொல்லி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் நடத்திய விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் கண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் […]
தற்போது உள்ள பெற்றோர்கள் அனைவரும் தனது குழந்தைகளை ஒரு சிறந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தற்போது உள்ள பெற்றோர்கள் மனதில் பதிந்துள்ளது. தங்களது குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் பெற்றோர்கள் மனதில் இருப்பதால் தான் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் […]
ஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 46 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 46 அரசு பள்ளிகள் பள்ளிகள் மூடப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர் எண்ணிக்கை இல்லாமல் இருக்கும் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். 46 அரசு பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக செயல்படும் என்றும் மாணவர்கள் குறிப்பிட்ட […]
தமிழ் மொழி குறித்து தவறான தகவல் இருக்கு பாடம் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் 12 ம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலம் மொழி பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்று இருந்தது. அந்த பாடத்தில் தமிழ் மொழி 2300 ஆண்டுகள் தான் பழமையானது என்றும் தமிழை விட சமஸ்கிருதம் தான் தொன்மையான […]
தமிழக அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த ஒரு மாணவருக்கு கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 12 ம் வகுப்பு முடிந்ததும் மருத்துவம் படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வு உள்ளது. வெளியில், பல தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வுக்கு என்று பயிற்சி அளித்து வருகிறது. அது போல், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளிலே சிறப்பு பயிற்சி […]
தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெருவுடையார் கோவில்,அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விசுற்றுலா செல்லும் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் செல்லும் வாகனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.