அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் போன்று தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியது.அதன்படி,தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில்,சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் […]