இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசி. இப்படம் குறித்தும், இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஜோதிகா குறித்தும் இயக்குனர் கெளதம் ராஜ் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் கெளதம் ராஜ் கூறியதாவது, ராட்சசி படத்தை பார்ப்பவர்களுக்கு அவரவரின் பள்ளி வாழ்க்கை கண் முன் வந்து போகும். மேலும், நடிகை ஜோதிகா இப்படத்திற்காக நிறைய ஆசிரியர்களிடம், அவர்களின் உடல் மொழி, உடை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து நடித்ததாகவும், கெளதம் ராஜ் தெரிவித்துள்ளார்.