சேலம் : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதை தொடர்ந்து சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள திரையரங்கில் ரஞ்சித் ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் பார்த்து முடித்த பிறகு வெளிய வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் ஆணவக்கொலை பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் ஆணவ படுகொலைக்கு எதிராக நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று […]