திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் சுமார் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள் சட்டத்துக்கு முரணான வகையில் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்தி மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட […]
குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் […]
சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் பரங்கிமலை ரயில் நிலத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொன்ற வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதல் முறையாக சிபிசிஐடி போலீசார் அளித்த பரிந்துரையின்படி, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரின் குண்டாஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் சிறையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த சாமித்துரை என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 7ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது கோவை சிறையில் இருக்கும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ராக்கெட் […]
கள்ளக்குறிச்சி கலரவம் தொடர்பாக மேலும் 4 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. அதன்படி, சர்புதீன், சரண்ராஜ், லட்சாதிபதி, மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாணவர்கள் சான்றிதழ், வாகனங்களை எரித்து முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பேர் மீது குண்டர் சட்டம் […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான மதன்: இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தருமபுரி அருகே பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். குண்டர் சட்டம் – சிறையில் அடைப்பு: […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். இதனையடுத்து,பப்ஜி மதன் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில்,சிறையில் […]
பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணரான் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டதாக கல்யாணரான் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது 2வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் […]
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது […]
போதைப்பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் – எஸ்.பி ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால், தயாரித்தால் குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கஞ்சா, புகையிலைப் பொருள் கடத்தலை தடுக்க 3 தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.