முந்திரி பருப்பு லாரியை கடத்தியை வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம். தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் கடந்த நவம்பர் 27-ஆம் கைது செய்யப்பட்டார். 12 டன் முந்திரி கடத்தல் தொடர்பாக ஜெபசிங் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடைபெற்றது. முந்திரி கடத்தலில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் […]
தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் மதன் கைது செய்யப்பட்டாா். பின் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கைது […]
கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் வலைகுளம் கண்மாயில் 15,000 பனைவிதைகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், பொதுமக்கள் அதிக அளவில் பனைமரங்கள் நடவேண்டும். மேலும், கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது. தி.மு.க மீதும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தார். இதைத்தொடர்ந்து, கிஷோர் கே.சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து, பெண் பத்திரிக்கையாளர் பற்றி இழிபடுத்தி பேசிய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமியை இரண்டாவது முறையாக […]