தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் தயாரிப்பான கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தனது தயாரிப்பில் முதலில் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யும் என்றும் 2024ம் ஆண்டில் பயனர்களுக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. கூகுளின் முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து பிரீமியம் சாப்ட்வேர், ஹார்ட்வர் மற்றும் அதிநவீன ஏஐ தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. […]