அன்றாட சாப்பிட தேவைப்படும் சமையல் பொருட்களான அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் சரக்கு & சேவை வரியை 18%-லிருந்து 28% ஆக உயர்த்துவதற்கான மாநிலங்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,143 பொருட்களில் அப்பளம்,வெல்லம்,பவர் பேங்க்கள், கைக்கடிகாரங்கள்,சூட்கேஸ்கள்,கைப்பைகள்,வாசனை திரவியங்கள்,கலர் டிவி செட்கள் (32 அங்குலத்திற்கு கீழே), சாக்லேட்டுகள்,சூயிங்கம்,வால்நட்,கஸ்டர்ட் பவுடர், மது அல்லாத பானங்கள்,பீங்கான் மூழ்கிகள்,பாத்திரம் கழுவும் தொட்டிகள், கண்ணாடிகள்,கண்ணாடிகளுக்கான பிரேம்கள் மற்றும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டு […]
செல்போன் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.இதன் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.செல்போன்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 12 சதவீதத்தில் […]
2019 அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.95,380 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட குறைவாக வசூலாகி உள்ளது.இதேபோல் கடந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 1,00,710 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.