முழு கொள்ளளவை எட்டியது கோமுகி அணை..வினாடிக்கு 1500 கனஅடி நீர் வெளியேற்றம்.!
விழுப்புரம் மாவட்டத்தின் கச்சிராயப்பாளையம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி அணை உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியின் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியள்ள நிலையில், தற்போது வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது.