சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ,பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான படம்.2.0 . இந்த படம் நவீன தொழில்நுட்பத்துடன் 3_d யில் உருவாக்கப்பட்ட்து.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் , நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கு வழங்கப்படும் கோல்டன் ரீல் விருதுகளில், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவில் 2.0 படமும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகின்றது.