ஒலிம்பிக்ஸ் 2024 : 33ஆவது ஒலிம்பிக்ஸில் சீனா அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. சனிக்கிழமையன்று Chateauroux-ல் நடந்த பாரீஸ் விளையாட்டுப் போட்டியின்10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு இறுதிப் போட்டியில், தென்கொரியாவை சீனா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரிய வீரர்கள் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. […]
நீரஜ் சோப்ரா: நடப்பு ஆண்டின் பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியானது துர்குவில் உள்ள பாவோ நர்மி ஸ்டேடியத்தில் இன்று (ஜூன்-18)செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா தற்போது தங்கம் வென்றுள்ளார். இந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியிருக்கிறார். நடைபெற்ற இந்த ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் 83.62 […]
ஜிம்னாஸ்டிக் போட்டி : நடைபெற்று வந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-26) அன்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பெண்கள் வால்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றை சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் வீராங்கனையான தீபா கர்மாகர் . ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இது ஆசிய ஜிம்னாஸ்டிக் […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் இன்று கூடைப்பந்து […]
சாங்வானில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான், தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆடவர் ஸ்கீட் ஷூட்டிங் போட்டியில் இந்தியாவிற்கு உலகக்கோப்பையில் முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்த நபர் என்ற பெருமையை பெறுள்ளார் மைராஜ். சாங்வோன் உலகக் கோப்பையில் விளையாட சென்ற இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் குழுவில் மூத்த வீரர் மைராஜ்.இவர் 40-ஷாட் இறுதிப் போட்டியில் 37 ஷாட்களை எடுத்தார். இவர் கொரியாவின் மின்சு […]
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய […]
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்.6 பிரிவில் ஹாங்காங் வீரர் மன் காய் சூவை எதிர்கொண்ட இந்தியா வீரர் கிருஷ்ணா நாகர் 2-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்முலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் […]
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தார் சுமித் அண்டில். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில் பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து இந்திய வீரர் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடத்தில் இருப்பதன் […]
போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றார். போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் தங்கப்பதக்கங்களை பெற்றார். இதில் ஹரியானாவைப் சார்ந்த 17 வயதான பாக்கர் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இரட்டை தங்கப் […]
பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.இதனையடுத்து அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் .பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதுடன் ரூ.5 […]
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்துக் கொண்டு, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இளவேனில் அளித்துள்ள பேட்டியில், ” துப்பாக்கி சுடுதலில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு எனது பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்றும், தமிழகத்தில் தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சீனாவில் […]
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய விராங்கனை என்ற பெருமையை நவ்ஜோத் கவுர் பெற்றுள்ளார். இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர், கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை […]
மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற காஞ்சனமாலா தங்கம் வென்றார். இவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் 26 வயதான பெண்மணி ஆவார். இவர் 200.மீ மெட்லே போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்திய வீரர் ஆவார். ஆனால், அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தவறவிட்டார், பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 5 வது இடத்திற்கு வந்தார். இது குறித்து காஞ்சன்மலா பாண்டே பேட்டியில் கூறும்போது, ‘நான் […]
மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். மேலும், இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் தகுதிபெற்று பதக்கத்தை உறுதி செய்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இதன் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில், 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து, 54 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி […]