தங்கம் கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் ராணி என்பவர் வீட்டில் சுமார் 30 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மர்ம நபர்கள் சிலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.