நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. […]