இங்கிலாந்து, கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் புஜாரா. மார்ச் முதல் மே மாதம் வரையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அந்த காலகட்டத்தில் புஜாரா இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பார். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. […]