கொச்சியில் உள்ள தொப்பும்படி பாலம் அருகே கிளைடர் மோதியதில் இரண்டு கடற்படை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அவர்கள் ஐ.என்.எஸ் கருடாவிலிருந்து ஒரு வழக்கமான பயிற்சிப் பயணத்திற்கு புறப்பட்டபோது காலை 7 மணியளவில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு அதிகாரிகள் உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்த லெப்டினென்ட் ராஜீவ் ஜா மற்றும் பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு தெற்கு கடற்படை உத்தரவிட்டது. […]