கோவை உயிரியல் பூங்காவில் ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு. ஆசியாவில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, சீனா, தைய்வான் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படக்கூடிய மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு தான் கண்ணாடிவிரியன். இப்பாம்பு நான்கு வகைகளை கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஏறக்குறைய ஏற்படக்கூடிய அனைத்து பாம்பு விஷக்கடி உயிர் இழப்புகளுக்கும் இவைதான் காரணம். தடித்த உடலுடன் பெரிய முக்கோண வடிவ தலை கொண்ட இந்த பாம்பு பெரிய மூக்கு துவாரம் உடையதாகவும் […]