அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல்லை நியமிக்க அமெரிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து, அந்த பதவியில் சிஐஏவின் இயக்குநர் மைக் போம்பியா நியமிக்கப்பட்டார். இதனால் காலியான சிஐஏ இயக்குநர் பதவியில், துணை இயக்குநராக இருந்த கினா ஹஸ்பெல்லை அதிபர் டிரம்ப் நியமித்தார். இந்நிலையில், கினா ஹஸ்பெல் நியமனம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 54 […]