பாரதமாதா ,மற்றும் தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, கிருஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில்,முன்னதாக நடைபெற்ற மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து […]
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி அருமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கடவுள்கள் அரசியல் கட்சி தலைவர்களை கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசிய நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடி வந்த நிலையில், மதுரையில் கடந்த 24 ஆம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குழித்துறை நீதிமன்றத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் […]
கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற இடத்தில் சில தினத்துக்கு முன்பு, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், இந்த வீடியோ […]
இந்துமத கடவுள்கள் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது. கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். இந்த […]