தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து அணி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது அனைத்து அணிகளின் […]
திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு. திமுக மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகியோர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவரணிச் செயலாளராக எழிலரசனும், இணை செயலாளர்களாக பூவை ஜெரால்டு, மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவர் அணி துணை செயலாளராக மன்னை சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், […]
அதிமுக பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக சசிகலா மேல்முறையீடு. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2வது வாரம் விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டியிருந்தது. நேற்று மாலை சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற அறிகுறிகள் ஏற்பட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சோனியா காந்தி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று […]