பொதுச்செயலாளர் பதவி இனி இல்லை..!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். சமரசம் ஏற்பட்ட நிலையில் 2 அணிகளும் ஒன்றாக இணைந்தன. இதையடுத்து முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னமும், கட்சி பெயரும் அந்த அணிக்கே திரும்ப கிடைத்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி கூட்டப்பட்டது. அதில் […]