மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி காவல்துறையினரிடம்,காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாணவரணி அமைப்பான,இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்(என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளர் நாகேஷ் காரியப்பா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து,நாகேஷ் காரியப்பா அளித்த புகாரில்,”நாடு முழுவதும் அதிக அளவிலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.இந்நிலையில்,நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை.எனவே,அவரை […]