தங்கப்பதக்கங்களை குவித்த வீராங்கனை காய்கறி விற்பனையாளராக மாறிய அவலம்.!
8 தங்க பதக்கங்களை வென்றுள்ள கீதா குமாரி சாலையோர கடைகளில் வேலைபார்த்த தகவல் அறிந்ததும், ஜார்கண்ட் மாநில முதல்வர் அவருக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியும், மாதந்தோறும், 3000 ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கீதா குமாரி என்ற விளையாட்டு வீராங்கனை மாநில அளவிலான நடைப்பயிற்சி போட்டிகளில் இதுவரை 8 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டிகளில் வெள்ளி பதக்கங்களையும், வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இத்தகைய வீராங்கனை வறுமையின் […]