சென்னையில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும், அதன் பார்க்கிங் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த புதிய மொபைல் ஆப் வெளியாகியுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி பார்க்கிங் செய்தால் இருசக்கர வாகனத்திற்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் தொகை நெரிசலும் அதிகரித்துள்ளது. அதே போல, சென்னையில் வாகன பயன்படும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் ஆங்காங்கே பார்க்கிங் பிரச்சனை உள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய யோசனையை அறிமுகப்படுத்த உள்ளது. […]