2022 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தினார் கவுதம் அதானி. 2022-ஆம் ஆண்டின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஐஐஎஃப்எல் (IIFL) வெல்த் ஹுருன் இந்தியா இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தில் இருக்கிறார். இவர் 2021-ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் 1612 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதன் மூலம் இவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.10,94,400 கோடி ஆகும். இதனால், கவுதம் அதானி முதலிடத்தில் இருந்த முகேஷ் […]
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி. உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார். இந்திய கோடீஸ்வரர், தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் வருவாய், அதானி குழுமத்தின் பங்குகளின் ஏற்றத்தால், உலகின் இரண்டாவது பணக்காரராக அவரை உயர்த்தியுள்ளது. பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலின்படி, செப்.16, 2022 நிலவரப்படி, அதானியின் நிகர மதிப்பு $155.7 பில்லியன் ஆகும். […]
நூற்றாண்டிலேயே சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது என்று தொழிலதிபர் அதானி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை […]