எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி விளை நிலங்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான், மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார். கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரையிலும், தமிழ்நாட்டின் […]