சென்னை : திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியான விக்டரி பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், 35 மாணவ/மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர், மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு மீதமிருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு பரபரப்பான சூழ்நிஇலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதன் காரணமாக, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் […]
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று இரவு அமோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் பொதுமக்கள் வீடுகளுக்கு சென்றனர். அமோனியா வாயு கசிவுக்கு காரணமான தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள பர்வாடா மண்டலில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில் திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் பார்மா நகரில் உள்ள லாரஸ் நிறுவனத்தின் யூனிட்-3ல் வாயு கசிவு ஏற்பட்டது. சில தொழிலாளர்கள் எரிவாயு கசிவைத் தடுக்க முயன்றனர், ஆனால் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது, […]
விஷவாயு கசிவுக்கு காரணமாக இருந்த எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு காரணமான எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எல்.ஜி பாலிமர் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 2000 பேர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே […]
விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். […]
விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக சாலையில் மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த […]
விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் ராகுல் காந்தி. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக […]
ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷவாயு கசிவு அங்கிருந்து 3 கி.மீ தூரத்திற்கு பரவிய நிலையில், இந்த கசிவினால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாலையில் சென்ற […]
ஆந்திராவில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கேஸ் பைப் லைனில் 12 மணி நேரத்துக்கு மேலாக கேஸ் கசிந்து வருகிறது .பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் கேஸ் கசிவை சரி செய்ய ஓஎன்ஜிசி நிபுணர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கேஸ் பைப் லைன் உள்ளது.இந்த கேஸ் பைப் லைனில் 12 மணி நேரத்திற்கும் மேலாக கேஸ் கசிந்து வருகிறது. பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் […]