கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு. உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத், ஆண்டுதோறும் நடக்கும் கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் இந்தாண்டு கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் ராயல் கார்டன் விருந்தில் ராணிக்கு பதிலாக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 96 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத், […]