சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ வசதி […]