தமிழ் சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் காலமானார். டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. பிறகு, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர். குறிப்பாக, சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது நடிப்பு […]
வடமாநிலங்களில் முக்கிய பண்டிகையான கங்கா தசராவில் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடமும், இந்த வருடமும் பல கோவில் திருவிழாக்கள் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் […]
கங்கை ஆற்றில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தையை வளர்ப்பதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்ததை படகு ஓட்டிகள் பார்த்துள்ளனர். அந்த மரப்பெட்டியில் பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மரப்பெட்டியில், அந்த பெண் குழந்தையுடன் பல தெய்வங்களின் புகைப்படம் இருந்தது. மேலும், குழந்தை பிறந்த விவரங்களுடன் […]
உத்திர பிரதேசத்தில் கங்கை நதியில் உள்ள காவி துணிகள் அகற்றம். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உத்திரப்பிரதேசத்தில், கங்கை ஆற்றில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதாக தெரிவிக்கப்பட்டது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், கங்கை நதியில் இறந்தவர்கள் உடலை வீசப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பயன்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்டுள்ள […]
கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதி இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்று. இந்த நதி இயற்கை மாசாலும், மக்களின் கவனக் குறைவாலும் நதி பல வகைகளில் மாசடைகிறது. அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் மூலம், நதியை மாசு இல்லாத, சுற்றுச்சூழல் ரீதியாக ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவதை உறுதி செய்ய முயல்கிறது. இந்நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதியைப் […]
உத்திர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாடு ,கங்கா மற்றும் பகவத்கீதை ஆகியவற்றின் காரணமாக இந்தியா விஸ்வ குருவாக மாறி உள்ளது. இவை மூன்றும் இந்தியாவின் அடையாளம் ஆகும்.கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு மாடுகள் கொலை செய்யப்படுவதை தடுக்கவில்லை.அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை.
கங்கை நதி கரையில் 2 பக்கங்களிலும் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, மூலிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் . தேசிய மருத்துவ தாவர வாரியம் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவித்துள்ளது என்று தெரிவித்தார் .மேலும் மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதன் மூலம் 5000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட […]
அகர்வால் மரணத்தை தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்த கோரி மேலும் ஒரு சாமியார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள், நீர் மின் நிலையங்கள் கட்டுவதால் நதியின் போக்குமாறுகிறது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆன்மீகவாதியுமான ஜி.டி. அகர்வால் 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு சாமியார் தலைநகர் ரிஷிகேஷில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் பெயர் கோபால்தாஸ்.36 வயதாகும் இவர் இளமையிலேயே துறவியானார். […]