உத்தர பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் இந்த வருடம் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் […]
வருடந்தோறும் ஆவணி மாதம் விநாயகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பொழுது விநாயகரை சிலை செய்து தங்கள் பகுதியில் வைத்து வணங்கி, வழிபட்டு அதன் பின்பதாக கடலில் அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதே போல தமிழகத்திலும் இந்த விநாயகர் […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுப்பு. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா பரவக் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. தமிழ்நாட்டில் வருகிற 15ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய […]
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து” என்ற பதினொன்றாம் […]