பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காலித் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சைஃபுல்லா கசூரி, லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதி, இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது, 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் மூன்று வரைபடங்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த சம்பவத்தின் போது, […]