சென்னையில் உதவி இயக்குனர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனரான காந்தி லலித்குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். சின்னத்திரை நடிகையான நிலானி என்பவரை காதலித்து வந்த நிலையில் காந்தி லலித்குமாரை பிரிந்ததும், நிலானியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. சமூக வலைதளங்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வேகமாக பகிரப்பட்டு […]